செய்திகள்,திரையுலகம் பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…

பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…

பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!… post thumbnail image
ஐதராபாத்:-ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி லியோன் கவர்ச்சி நடிகையானார். அதேசமயம் அவ்வப்போது ஓரிரு படங்களில நிர்வாண காட்சிகளிலும்கூட நடித்தார்.இப்படி சில ஆண்டுகளாக வடஇந்திய ரசிகர்களை புரட்டி எடுத்து வந்த சன்னிலியோன், தற்போது வெளியாகியுள்ள வடகறி மூலம் கோலிவுட் ரசிகர்களையும் துவம்சம் செய்ய வந்திருக்கிறார்.

அதோடு, தமிழில் சிவகார்த்திகேயன்ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது கமிட்டாகியிருக்கிறார்.
அப்படத்தில் ஜெகபதிபாபு, ராகுல் ப்ரீத்சிங் ஜோடி சேர்ந்திருப்பதால், சன்னிக்கு தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தை கொடுத்திருக்கிறார்களாம். ஆனால், சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லாமல் பாதி படத்துக்கு மேல் வருவது போன்று அவரது காட்சிகளை அதிகப்படுத்தியிருப்பதோடு ஒரு குத்துப்பாட்டும் கொடுத்திருக்கிறார்களாம்.

அதனால் தமிழில் ஆடியதுபோல் உடம்பை கவர் பண்ணி ஆடாமல், பாலிவுட்டில் ரவுண்டு கட்டியதுபோன்று செமத்தியான குத்தாட்டம் போட்டு ஆந்திராவை கலக்கி எடுக்கப்போகிறாராம் சன்னி லியோன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி