செய்திகள்,திரையுலகம் நடிகை இலியானாவுடன் ஊர் சுற்றும் விராட் கோலி!…

நடிகை இலியானாவுடன் ஊர் சுற்றும் விராட் கோலி!…

நடிகை இலியானாவுடன் ஊர் சுற்றும் விராட் கோலி!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர் வீராத் கோலி. இவர், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அனுஷ்கா இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரபரப்பாகப் பரவின. ஐ.பி.எல். தொடக்க விழாவில் கூட ஷாரூக்கான் நடத்திய சுயம்வரம் விளையாட்டில், அனுஷ்காவின் படத்தைத் தேர்வு செய்த கோலி, தங்களுக்கு இடையே உள்ள காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் கோலி தற்போது தெலுங்கு நடிகை இலியானாவுடன் நட்பு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு ஷாம்பூ விளம்பரப் படத்தில் தெலுங்கு இலியானாவுடன் கோலி இணைந்து நடித்தார். அந்தச் சமயம்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாம். தற்போது கோலி- இலியானா ஜோடியை பல இடங்களில் காண முடிகிறது என்கிறார்கள். வழக்கம்போல இத்தகவலையும் விராட் கோலி மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி