செய்திகள்,திரையுலகம் சூறையாடல் (2014) திரை விமர்சனம்…

சூறையாடல் (2014) திரை விமர்சனம்…

சூறையாடல் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தேனிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில், அண்ணன், தங்கையாக நாயகன் ஸ்ரீபாலாஜியும், லீமாவும் வசித்து வருகின்றனர். சிறுவயதிலேயே அப்பாவின் கொடுமையால் அம்மாவை பறிகொடுத்த ஸ்ரீபாலாஜி, தன்னுடைய அப்பாவின் தயவில்லாமல் தனியொருவனாக வளர்த்து வருகிறான்.இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். தனது தங்கை வயதுக்கு வந்ததும், அந்த ஊரில் வசிக்கும் பலரும் அவளை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். ஒருமுறை பள்ளியில் தனது தங்கைக்கு லவ் லெட்டர் கொடுத்தவனுடைய கையை ஒடித்து விடுகிறார். தனது நண்பர்கள் வட்டாரத்தையும் ஒதுக்கி வைக்கிறான்.

அதே ஊரில் வசிக்கும் வில்லன் மருது, ஒரு பெண்ணை கெடுத்துக் கொன்ற கொலைகாரன் என்பதால், தனது தங்கையின் பாதுகாப்புக்காக அவனை போலீசில் காட்டிக் கொடுக்கிறார் பாலாஜி. தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்த பாலாஜியையும், அவனது தங்கையையும் பழிவாங்க துடிக்கிறார் மருது.ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தங்கையை காப்பாற்றும் வேளையில், அவள் மயங்கிவிழ மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார் பாலாஜி. அங்கே அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று டாக்டர்கள் சொல்கின்றனர். அதைக்கேட்டதும் அதிர்ச்சியாகிறார் பாலாஜி. அவளிடம் விசாரிக்காமலேயே அவளுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அறிய முற்படுகிறார். ஒருகட்டத்தில் தனது நண்பன்தான் அதற்கு காரணம் என்று அவனைத் தேடிச் செல்கிறான். ஆனால், அவனோ வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறான். உடனே அவன்தான் தனது தங்கையின் கர்ப்பத்திற்கு காரணம் என்று உறுதியாக நம்பி விடுகிறான். சில நாட்களிலேயே நண்பன் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகிறான். அவனை எதுவும் பேசவிடாமல் அடித்து கொலை செய்கிறார் பாலாஜி. கொலை செய்த பாலாஜியை போலீஸ் தேடுகிறது.

போலீசில் சிக்கினால், தனது தங்கையின் கர்ப்பம் வெளியே தெரிந்து அவமானகிவிடும் என்பதால் தங்கையை கொன்று, தானும் தற்கொலை செய்துகொள்வதற்காக அவளை அழைத்துக் கொண்டு மலைக் கோயிலுக்கு செல்கிறார். எதுவும் அறியாத தங்கையும் அவனுடன் செல்கிறாள். இவர்களைப் பழிதீர்க்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த வில்லன் மருது இவர்களை பின்தொடர்கிறான்.இறுதியில், பாலாஜி தனது தங்கையை கொன்று, தற்கொலை செய்துகொண்டாரா? வில்லன் மருது அவர்களை பழிவாங்கினாரா? என்பதே எதிர்பாராத கிளைமாக்ஸாக அமைத்திருக்கிறார்கள்.ஸ்ரீபாலாஜி, அம்மா இல்லாமல் தங்கையை வளர்க்கும் அண்ணனாக, எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். தனது தங்கை கர்ப்பம் என அறிந்தபிறகு அவரது மனது படும் வேதனையில் நம்மையும் வேதனைப்பட வைத்து விடுகிறார். நாயகி காயத்ரிக்கு அளவான கதாபாத்திரம்தான். இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. ஆனால், நாயகியின் தங்கையாக வரும் லீமாவுக்கு படம் முழுவதும் நடிக்க நல்ல வாய்ப்பு. ஆரம்பக்காட்சியிலேயே நம்மை ஈர்த்து விடுகிறார்.

அம்மாவாக நடித்திருக்கும் அம்மு, சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். அவருடைய கணவராக வரும் ஜெயன், தோற்றத்திலும், நடிப்பிலும் முரட்டுத்தனத்தை காட்டியிருக்கிறார். வில்லன் மருதுவும் தனது சேட்டைகளால் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். இவர் வரும் காட்சிகள் நமக்கு பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்க்கையை நம் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு படத்திற்கு திரைக்கதை அமைத்து அழகான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தாமரைக்கண்ணன். ஆனால், தங்கையை விசாரிக்காமலேயே அவளை கொல்லத் துணிவது அதுவரையில், அந்த அண்ணன் கதாபாத்திரத்தில் இருந்த மதிப்பு சற்று குறைகிறது. இதை, இயக்குனர் கவனித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அகிலேஷின் ஒளிப்பதிவில் தேனி மலைப்பகுதியின் அழகையும், கிராமத்தின் அழகையும் அப்படியே அள்ளித் தெளித்திருக்கிறார். மிதுன் ஈஸ்வரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சூறையாடல்’ பாசம்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி