மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிரமாகத் தேடியபோதும், அதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அந்த விமானத்தை வேண்டுமென்றே சிலர் வேறுபாதையில் திருப்பியிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா? அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா? தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், விசராணையில் மனித தவறுகளே விமானம் மாயமானதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி மனித தவறுகள்தான் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் அது விமானத்தின் தலைமையை விமானியே காரணாம இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த தகவலை சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: