கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர முடிவு செய்துள்ளது.

கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.சுவிஸ் வங்களில் பணம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 58-வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: