உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-அமெரிக்கா மோதிய ஆட்டம் டிரா!…

விளம்பரங்கள்

மனாஸ்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவும் போர்ச்சுகல்லும் மோதின. இதில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் அரேனா அமேசோனியா மைதானத்தில் திரண்டிருந்தனர்.தொடக்கம் முதலே உற்சாகமாக இரு அணிகளும் ஆடி வந்த நிலையில் ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து போர்ச்சுகல் வீரர் நானி தனது அணியின் கோல் கணக்கை துவக்கினார்.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்ப்சி கோல் போஸ்டில் அடித்த பந்தை போர்ச்சுகல் வீரர்கள் லாவகமாக தடுத்தனர். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் மீண்டும் நானி அடித்த பந்தை அமெரிக்காவின் ஹோவர்ட் கோல் போஸ்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தார்.இந்த சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபோது போர்ச்சுகல் அணியில் அல்மீடாவுக்கு பதிலாக வில்லியம் களமிறங்கினார். ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ரோனால்டோ கோலை நோக்கி அடித்த பந்தை அமெரிக்க வீரர் பெஸ்லர் தடுத்தார். ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜெர்மெய்ன் ஜோன்ஸ் அற்புதமான கோல் அடித்து கோல் கணக்கை சமன் செய்தார்.

மீண்டும் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அமெரிக்க கேப்டன் கிளிண்ட் டெம்ப்ஸி ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா முன்னிலை பெற்றது. போர்ச்சுகல் அணியின் ரோனால்டோ ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அடித்த பந்தை கோல் கீப்பர் ஹோவார்ட் லாவமாக தடுத்துவிட்டார். இரண்டாவது பாதி ஆட்டமும் முடிந்த நிலையில் 5 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.கூடுதல் நேரத்தில் 4 நிமிடங்கள் முடிந்த நிலையிலும் கூட போர்ச்சுகல் அணி கோல் அடிக்கவில்லை. ஆட்டம் முடிய ஒரு நிமிடமே எஞ்சியிருந்த நிலையில் போர்ச்சுகல் அணியின் வாரேலா சிறப்பு மிக்க கோலை அடித்து கோல் கணக்கையும் சமன் செய்து ஆட்டத்தை டிரா செய்தார். ஆட்டநாயகனாக அமெரிக்க கோல் கீப்பர் ஹோவார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: