செய்திகள்,திரையுலகம் 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்!…

44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்!…

44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்!… post thumbnail image
சென்னை:-பழம்பெரும் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பல பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று 1970 ஆண்டு இசைதட்டில் அவர் வெளியிட்ட திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற ஆல்பம்.

எச்.எம்.வி நிறுவனம் ஸ்டீரியோ இசைத் தட்டில் இதனை வெளியிட்டது. இதில் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல்களில் ஒரு சிலவற்றை தூர்தர்ஷன் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. இலங்கை தொலைக்காட்சியும் பயன்படுத்திக் கொண்டது.

எம்.எஸ்.வி., மீது அன்பும், அக்கறையும், கொண்ட சிலர் இந்த ஆல்பத்தை தற்போது சிடி வடிவில் மீண்டும் வெளியிடுகிறார்கள். ஜூன் 22ல் ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் இது வெளியிடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி