செய்திகள்,திரையுலகம் மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கும் ஷாரூக்கான்!…

மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கும் ஷாரூக்கான்!…

மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கும் ஷாரூக்கான்!… post thumbnail image
மும்பை:-இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாரூக்கான் பெண் இயக்குனரான பராகான் இயக்கிய ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில், சட்டை அணியாமல் ஒரு பாடல் காட்சியில் நடித்து அசத்தினார்.

தற்போது பராகான் இயக்கி வரும் ‘ஹேப்பி நியு இயர்’ படத்தில் மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கப் போகிறாராம். ஆனால், இந்த காட்சி பாடலிலா அல்லது படத்தில் வரும் ஒரு காட்சியிலா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். இந்த ‘ஹேப்பி நியு இயர்’ படத்தில் மீண்டும் ‘ஓம் சாந்தி ஓம்’ கூட்டணிதான் இணைகிறது. பராகான் இயக்குகிறார், ஷாரூக்கான் – தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கிறார்கள்.அபிஷேக்பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாக உள்ளது. பராகான் – ஷாரூக்கான் கூட்டணி இந்த படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி