செய்திகள்,திரையுலகம் டீச்சராக நடிக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

டீச்சராக நடிக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

டீச்சராக நடிக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!… post thumbnail image
ஐதராபாத்:-சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தபடம் தெலுங்கில் ரீமேக் செய்யபடுகிறது.படத்தில் ஜெகபதி பாபு,மஞ்சு மனோஜ், ராகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழில் டீச்சர் வேடத்தில் நடித்த் பிந்து மாதவி கேரகடரில் தெலுங்கில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோனை பாலிவுட்காரர்கள் அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தென்னிந்தியாவிலும் தனது சேவையை தொடங்கினார். தற்போது வெளியாகி உள்ள வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இந்நிலையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் ஒரு குத்து பாடலுக்கு சன்னி லியோன் அடி உள்ளதாக கூறப்படுகிறது .தற்போது தெலுங்கிலும் சன்னி லியோனுக்கு வாய்ப்பு வந்து உள்ளது. இந்த படத்தில் அவர் தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார்.தமிழை விட இந்த கேரகடருக்கு தெலுங்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் எல்லாம் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி