செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!… post thumbnail image
சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 16க்கு விற்றது.அதைத் தொடர்ந்து 17ம் தேதி பவுனுக்கு ரூ.136 குறைந்தது. ரூ.20 ஆயிரத்து 2768 ஆக இருந்தது. பிறகு படிப்படியாக உயர்ந்து நேற்று பவுன் ரூ.20 ஆயிரத்து 928–க்கு விற்றது.

இன்று ஒரே நாளில் கிடுகிடுவென பவுனுக்கு ரூ.592 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 520 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.74 அதிகரித்து ரூ.2690 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு ஈராக் பிரச்சினையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அங்கு உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளதால் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது.
பொதுவாக கச்சா எண்ணை விலை உயரும் போது தங்கம் விலையும் அதிகரிக்கும். அதே போன்று தான் தற்போதும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்புக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போதும் தங்கம் விலையும் உயரும்.
மேலும் சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதுவே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி