செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது!…

இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது!…

இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் உலக உணவுப்பரிசுக்கான அமைப்பு ஆண்டு தோறும் சிறந்த வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை 2014ம் ஆண்டுக்கான உலக உணவு விருதை இந்திய விஞ்ஞானியான சஞ்சயா ராஜாராமுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முண்ணனி விஞ்ஞானிகளின் ஒருவரான சஞ்சயா ராஜாராம் பசுமைப் புரட்சியின் வாயிலாக உலக அளவில் கோதுமை உற்பத்தியை 20 கோடி டன்களுக்கும் மேலாக அதிகரித்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை உலக உணவுப் பரிசுக்கான அமைப்பின் தலைவர் கென்னத் எம் கின் உறுதி செய்துள்ளார். இந்த பரிசின் மதிப்பு 2.5 லட்சம் அமெரிக்க டாலர். இது இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி ஆகும்.

விஞ்ஞானி ராஜராம் இதுவரை புதிய ரக, அதிக விளைச்சல் தரக்கூடிய 480 வகையான கோதுமை வகைகளை கண்டறிந்துள்ளார். இந்த கோதுமை ரகங்கள் உலகம் முழுவதும் உள்ள 6 கண்டங்களில் ஏறத்தாழ 51 நாடுகளில் பயிரிடப்பட்டு விளைவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி