ஸ்பெயின் நாட்டின் ராணியான பத்திரிகையாளர்!…

விளம்பரங்கள்

மேட்ரிட்:-ஸ்பெயின் நாட்டில் ஜூவான் கார்லஸ் மன்னராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவரது உடல்நிலையும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் அவர் மன்னர் பதவியை விட்டு சமீபத்தில் விலகினார்.

இதையடுத்து அந்த நாட்டின் புதிய மன்னராக அவரது மகன் பெலிப்பி பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் பெலிப்பியின் மனைவி லெட்டிஸியா ஆர்டிஜ், நாட்டின் ராணி ஆகி உள்ளார். இவர் டி.வி. பத்திரிகையாளராக இருந்தவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் பெலிப்பியை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆர்டிஜ் தந்தையும் ஒரு பத்திரிகையாளர், தாயார் நர்சு, தாத்தா சாதாரண டாக்சி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: