செய்திகள்,திரையுலகம் விஜய்யின் ‘கத்தி’ படத்தில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!…

விஜய்யின் ‘கத்தி’ படத்தில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!…

விஜய்யின் ‘கத்தி’ படத்தில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!… post thumbnail image
சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தற்போது ‘சான்சே இல்லை’ என்றொரு படத்தில் நாயகனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வரும் அவர், தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், ஒரு பாடல் காட்சிகளில் விஜய்யுடன் சிறிது நேரம் நடனமாடி விட்டு சென்றதைப்போன்று தானும், இப்படத்தில் விஜய்யுடன் நடனமாட ஆசைப்படுகிறாராம்.

இந்த விசயத்தை ஆரம்பத்திலேயே விஜய்யின் காதில் போட்டு விட்டாராம். ஆனபோதும், இதுவரை அதுபற்றி முருகதாசிடமிருந்து எந்தவொரு அழைப்பும் அனிருத்துக்கு இல்லையாம்.அதையடுத்து, படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பாடலாக பதிவு செய்து கொடுத்து வந்த அனிருத், விஜய் பாடும் ஒரு பாடலை மெகா ஹிட்டாக்கி விட வேண்டும் என்று தற்போது ஏராளமான டியூன்களை போட்டுத்தள்ளிக்கொண்டிருக்கிறார்.

இந்த டியூன்களில் ஒன்றைத்தான் ஏ.ஆர்.முருகதாசும்,விஜய்யும் செலக்ட் பண்ணப்போகிறார்களாம்.அந்த டியூன் ஓ.கே ஆனதும், அந்த பாடலில் ஏதோ ஒரு மூலையிலாவது தான் முகம் காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் அவர்கள் முன்பு எடுத்து வைக்கப்போகிறாராம் அனிருத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி