செய்திகள்,திரையுலகம் டுவிட்டரில் புலம்பும் நடிகை குஷ்பூ!…

டுவிட்டரில் புலம்பும் நடிகை குஷ்பூ!…

டுவிட்டரில் புலம்பும் நடிகை குஷ்பூ!… post thumbnail image
சென்னை:தி.மு.க.விலிருந்து விலகுவதாக குஷ்பூ அறிவித்த பிறகு பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்துவிட்டார் குஷ்பூ. எந்த பத்திரியைப் புரட்டினாலும் குஷ்பூ பற்றிய செய்திதான். டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் குஷ்பூ பற்றிய செய்திகளை நிறைந்திருக்கின்றன.

அவற்றில் அவரை விமர்சிக்கும் கருத்துக்களே அதிகம் பகிரப்படுகின்றன. இந்த தகவல்கள் குஷ்பூவை கடுமையாய் பாதித்துள்ளன. சினிமாவிலும் நடிக்கவில்லை, சின்னத்திரையிலம் பிஸி நடிகை இல்லை, அரசியலிலும் தற்போது இல்லை. எனவே ப்ரீயாக இருக்கும் குஷ்பூ, எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்கிறார். தன்னைப் பற்றிய கருத்துக்களை படிக்கிறார்.

அப்படி படிக்கும்போது அவரைப் பற்றிய எதிர்மறை கருத்துகள் குஷ்பூவை கடுமையாய் பாதிக்கச் செய்கின்றன. தன்னைப் பற்றிய ஒவ்வொரு கருத்துக்கும் உடனடியாய் மறுப்பு தெரிவித்து தன் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார். குறிப்பாக டுவிட்டரில் நிமிஷத்துக்கு ஒரு மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி