செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…

சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…

சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!… post thumbnail image
பீஜிங்:-சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பறவை காய்ச்சல் பறவியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள்.கோழி மற்றும் பறவைகள் மூலம் வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இது முந்தைய பறவை காய்ச்சலை விட வீரியம் உள்ளதாக இருக்கிறது.புதிய பறவை காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளனர். 433 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவும் கோழி மூலம்தான் பரவுகிறது. எனவே கோழிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளை மூடும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.புதிய பறவை காய்ச்சல் இந்தியா, வியட்நாம், வங்காளதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி