செய்திகள்,திரையுலகம் எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!…

எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!…

எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ், தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி‘. அமலாபால் ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இதில் தனுஷ் சிகரெட் பிடிப்பது மாதிரியான படம் இடம் பெற்றிருந்தது. சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சி வந்தால் ‘சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும். விளம்பரங்களில் சிகரெட் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது.

அதோடு இந்த விளம்பரங்களுக்கு சில சமூக நல அமைப்புகள், சுகாதார அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுவாக வேலை இல்லாமல் இருக்கிறவர்கள்தான் விரக்தியில் சிகரெட் குடிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதுபோல இது இருப்பதாக சொன்னார்கள். இதையடுத்து தனுஷ் இந்த விளம்பரத்தை மாற்றச் சொன்னதாக தெரிகிறது. உடனடியாக மாற்றப்பட்ட விளம்பரம் வெளியிடப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி