நாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’!…

விளம்பரங்கள்

சென்னை:-விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன. ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு படத்தை தெலுங்கில் வெளியிட முடியவில்லை.

இது பற்றி அப்போது விஷாலிடம் கேட்டபோது, இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன அதனால்தான் ரிலீஸ் பண்ணவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் இந்துருடுவை ரிலீஸ் செய்வோம் என்று கூறினார். ஆனால் நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே இந்துருடுவை வாங்க யாரும் முன் வரவில்லை.

எனவே அப்படத்தை ரிலீஸ் செய்ய விஷால் பல வழிகளில் முயற்சிகளை தொடர்ந்தார்.இந்நிலையில் நாளை இந்துருடு ஆந்திராவில் வெளியாகிறது. தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தமாக 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது இந்துருடு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: