தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…

விளம்பரங்கள்

லண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் வந்து சேர்ந்தன.

இதைப்போல் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வேண்டுகோள்களை ஆய்வு செய்யும் கமிட்டிக்கு இந்த வேண்டுகோள்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டி, மேற்கண்ட பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

தீபாவளி, ரம்ஜான் போன்றவை இங்கு பரவலாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த பண்டிகைகளை வங்கி மற்றும் அரசு விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: