உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…

விளம்பரங்கள்

ரியோ டி ஜெனிரோ:-2014 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- மெக்சிக்கோ அணிகள் மோதின.ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின.

போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணியினர், சொந்த மண்ணில் சாதனை படைக்கும் முயற்சியில் வலையை நோக்கி நகர்த்திச் சென்ற பந்துகளை எல்லாம் மெக்சிக்கோ அணியின் கோல் கீப்பர் மிக சாதுர்யமான வகையில் தடுத்து ஆட்கொண்டதால், பிரேசிலின் கனவுக் கோட்டை தவிடுபொடியானது. 90 நிமிடங்களை கடந்து, 3 நிமிட உபரி நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யாததால் இந்த ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: