இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’, ‘கருப்பு ரோஜா’, ‘வனஜா கிரிஜா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்த ராம்கி, சமீபத்தில் மாசாணி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பிரியாணி, வாய்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதுநாள் வரை ஒரு நடிகராக இருந்து வந்த ராம்கி, தற்போது இயக்குநராக அவதரிக்க இருக்கிறார். தான் இயக்கும் முதல்படத்தை அவரே தயாரிக்க உள்ளார். இதற்காக சொந்தமாக ஆர்.கே. என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

தான் இயக்கும் முதல்படத்தில், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்க இருக்கிறார். தான் ஏற்கனவே நிறைய வெளிநாட்டு சீரியல்கள் தயாரித்து கொடுத்துள்ளதாகவும், அப்போது கிடைத்த அனுபவத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளதாக கூறுகிறார் ராம்கி. மேலும் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுப்பேன் என்கிறார் ராம்கி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: