செய்திகள்,திரையுலகம் சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?… post thumbnail image
சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படம் ‘வாலு’. ஷக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.சில பிரச்னைகளின் காரணமாக படம் தாமதமாகவே உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.தற்போது ‘வாலு’ படமும் ஆகஸ்ட் 15ல் வெளிவரப்போவதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். ‘அஞ்சான்’, ‘வாலு’ இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி