மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…

விளம்பரங்கள்

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகை கரிஷ்மா கபூர் அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கரிஷ்மா கபூர் மறுமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மும்பையைச் சேர்ந்த பிசினஸ்மேனான சந்தீப் என்பவரை அவர் மறுமணம் புரிய வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரிஷ்மா பிரச்சனையில் இருந்த போது அவருடன் நட்பாக பழக ஆரம்பித்த சந்தீப், போகப் போக அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். விவாகரத்து கிடைத்த பின் கரிஷ்மா அவரை மணமுடிக்கலாம் என்கிறார்கள்.

பொதுவாகவே கரிஷ்மா அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வாயை திறப்பதே கிடையாது. இந்த விஷயத்திலும் அவர் எதுவுமே பேசமாட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆனால், கரிஷ்மாவின் புதிய உறவுக்கு அவரது குடும்பத்தார் ஆதரவாக இருக்கிறார்களாம். அதோடு அவரது தங்கையும் நடிகையுமான கரீனா கபூர், அவரது கணவரும் நடிகருமான சைப் அலிகான் ஆகியோரும் கரிஷ்மாவுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: