‘கத்தி’ படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கத்தி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்கப் பட்டது. மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்தது. வடபழனி புஷ்பா கார்டனில் பெரிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. 40 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தினர்.

கத்தி படத்தில் விஜய் இரு வேடங்களில் வருகிறார். நாயகியாக சமந்தா நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கிறார். துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு விஜய்யும், ஏ.ஆர். முருகதாசும் மீண்டும் இதில் இணைந்துள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எற்பட்டு உள்ளது.கடைசி நாள் படப் பிடிப்பில் படக்குழுவினருக்கு விருந்து கொடுக்க விஜய் முடிவு செய்தார்.

இதையடுத்து ருசியான உணவு வகைகள் தயாரானது. சாமியானா பந்தல் போட்டு துணை நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் உட்கார வைத்து விஜய் தனது கைப்பட உணவு பரிமாறினார். படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். விஜய்யும், அவர்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்.தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: