செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டம் நாகாலாந்தில் துவக்கம்!…

இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டம் நாகாலாந்தில் துவக்கம்!…

இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டம் நாகாலாந்தில் துவக்கம்!… post thumbnail image
கொஹிமா:-இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டத்தை நாகாலாந்தில் அம்மாநில பொது சுகாதாரத் துறை மந்திரியான நோகே வாங்நோ துவக்கி வைத்தார்.புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீர் தயாரிக்கும் இத்திட்டம் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கொஹிமா நகருக்கருகே ட்சீசெமா கிராமத்தில் வெள்ளியன்று முதன் முறையாக துவக்கிவைக்கப்பட்டது.

கோஹிமா மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் மெரியமா மற்றும் கிஜுமெட்டோமா என்ற மேலும் இரு கிராமங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.அம்மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து அவர்களின் குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதுடன் சுத்திரிக்கப்பட்ட தரமான குடிநீரையும் வழங்கச் செய்துள்ளதாக நோகே வாங்நோ தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 6000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கப்படுவதாக அம்மாநில தலைமை பொதுப்பணித்துறை பொறியாளரான கெவிசெகா குருஸ் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி