நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும் மலேசிய நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதற்கிடையில் நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜெகதீஸ் கூறும்போது:-

ஷெரின் திறமை மிக்க ஒரு நடிகை. நண்பேன்டா படத்தில் நான்கைந்து காட்சிகளில் நடித்தாலும் படத்திற்கு திருப்புமுனையான கேரக்டர். உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் கேரக்டர். அவரது கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும் என்றார்.நயன்தாரா, உதயநிதியின் காதலை பிரிக்க நினைக்கும் அழகு வில்லியாக ஷெரின் நடிப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: