செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள்  தந்தத்திற்காக கொலை!… post thumbnail image
ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான யானைகள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஜெனிவாவிலுள்ள விலங்குகள் நல வாரியம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் தந்தத்திற்காக 20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டிலும், இதே அளவில், யானைகள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து யானையும் அழிந்து செல்லும் இனங்களின் பட்டியலில் இடம்பிடிப்பது தவிர்க்கமுடியாததாகி விட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி