செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யாவுடன் மோதும் மைக் மோகன்!…

நடிகர் சூர்யாவுடன் மோதும் மைக் மோகன்!…

நடிகர் சூர்யாவுடன் மோதும்  மைக் மோகன்!… post thumbnail image
சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளை தன் வசம் வைத்திருப்பவர் மோகன். இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. இதனால் இவர் வெள்ளிவிழா நாயகன் என்றும் பாடகராக பல படங்களில் நடித்தால் மைக் மோகன் என்றும் சினிமாத்துறையினரால் அழைக்கப்பட்டவர்.

சில காலங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த மோகன் சில வருடங்களுக்கு முன்பு சுட்ட பழம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பல கேரக்டர் ரோல்கள் கிடைத்த போதும் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் தற்போது மோகன் நடிக்க விரும்புவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் வெங்கட் பிரபு, சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க மோகனிடம் பேசியுள்ளார் வெங்கட்பிரபு. மோகன் இப்படத்தில் நடிப்பது குறித்து தற்போது முடிவு செய்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி