அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…

ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…

ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!… post thumbnail image
ஷிங்டன்:-ஈராக்கில் சன்னிபிரிவை சேர்ந்த ஐ.எஸ்.என்.எல். தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது.சமீபத்தில் ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் மற்றும் கிர்குக் ஆகிய 2 பெரிய நகரங்களை கைப்பற்றினர். மேலும், சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் மற்றும் துலியாவையும் பிடித்தனர்.

தலைநகர் பாக்தாத்தை நெருங்கி விட்டனர். எனவே, அவர்களை தடுத்து நிறுத்த உதவும் படி அமெரிக்காவிடம் ஈராக் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு இதுவரை மவுனம் சாதித்த அமெரிக்கா தற்போது வாய் திறந்துள்ளது. இது குறித்து அதிபர் ஒபாமா வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:–உள்நாட்டு போர் நடந்து வரும் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் தீவிர வாதிகளை ஒடுக்க உதவி செய்வோம்.இதுகுறித்து தேசிய பாதுகாப்பு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சில நாட்களில் அது எந்த விதமான உதவி என்று அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டுள்ள சன்னி பிரிவு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் படி ஷியா பிரிவினருக்கு அவர்களது மதகுரு கிராண்ட் அயாதுல்லா அலி அல்– சிஸ்தானி உத்தர விட்டுள்ளார்.கையில் ஆயுதம் ஏந்தி பாக் தாத் நோக்கி வரும் தீவிரவாதிகளை முறியடிங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு பாக்தாத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அறை கூவல் விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி