உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘இது கதிர்வேலனின் காதல்’ படத்திற்கு பிறகு உதயநிதி தயாரித்து நடித்து வரும் படம் ‘நண்பேன்டா’.இந்தப் படத்திலும் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகதீஸ் இயக்குகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தில் நயன்தாரா மட்டுமல்ல இன்னொரு நாயகியும் இருக்கிறார். அவர் ‘துள்ளுவதோ இளமை’ நாயகி ஷெரீன். நான்கு வருடங்களுக்குப் பிறகு ‘நண்பேன்டா’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கிறார்.
நண்பேன்டா படத்தில் ஷெரீனுக்கு உதயநிதியை ஒருதலையாய் காதலிக்கும் கதாபாத்திரமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: