செய்திகள்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…

மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…

மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஷிங் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. அதில் இருந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 239 பேர் கதி என்ன வென்று இது வரை தெரியவில்லை

இந்த விபத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சர்வதேச விமான நிறுவன சட்டப்படி விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், முதல் தவணையாக விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சத்தை மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வழங்கியுள்ளது.

இப்பணத்தை இதுவரை 6 மலேசியர்கள் மற்றும் ஒரு சீன குடும்பத்தினர் பெற்றுள்ளனர். இந்த தகவலை மலேசிய வெளியுறவுதுறை துணை மந்திரி ஹம்ஷா ஷைனுதீன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, ‘‘இந்த இழப்பீடு தொகை குறித்து சீனாவை சேர்ந்த 40 பயணிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.முழு இழப்பீட்டு தொகை தற்போது வழங்கப்பட்டது போன்று பின்னர் 3 மடங்கு அதிகமாக தரப்படும். அது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜெர்மனியின் அலையின்ஸ் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் செய்துள்ளது. எனவே, விபத்தில் இறந்த பயணிகளின் குடும்பங்களுக்கு அந்த நிறுவனம் இழப்பீடு தொகை வழங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி