செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய்கிரக பயணத்தில் 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்!…

செவ்வாய்கிரக பயணத்தில் 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்!…

செவ்வாய்கிரக பயணத்தில் 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்!… post thumbnail image
பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தினார்கள்.கடந்த 7 மாதங்களாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பூமியில் இருந்து செவ்வாய் அருகில் மங்கள்யான் செல்வதற்கான மொத்த தூரம் 680 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாகும். இதில் தற்போது 460 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை அதாவது 70 சதவீத தூரத்தை மங்கள்யான் கடந்து விட்டது.இன்னும் 30 சதவீத தூரமே பாக்கியுள்ளது. இந்த தூரத்தையும் கடந்து வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேரும்.இந்நிலையில் நேற்று மங்கள்யானில் உள்ள 4 என்ஜின்கள் இயக்கி வைக்கப்பட்டன.

16 வினாடிகளில் இந்த பணி செய்து முடிக்கப்பட்டது. இது மிகவும் சவாலான பணியாகும். இதை நேற்று இந்திய விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் மிகவும் திட்டமிட்டப்படி செய்து முடித்தனர்.நேற்று 4 புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டதால் மங்கள்யானின் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி வினாடிக்கு 29 கி.மீ. வேகத்தில் மங்கள்யான் செவ்வாய்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இனி செவ்வாய் கிரகத்தை நெருங்கியதும் மங்கள்யான் விண்கலத்தை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவதுதான் இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகப்பெறும் சவாலாக இருக்கும். இதிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் செவ்வாய்கிரகத்தை வெற்றிகரமாக ஆய்வு செய்யும் 3வது நாடு என்ற சிறப்பை இந்தியா பெறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி