செய்திகள்,திரையுலகம் பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!… post thumbnail image
சென்னை:-விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.

துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் ஹாலிடே படத்தின் வசூல் மட்டும் நாளுக்கு நாளுக்கு அதிகரித்தபடி உள்ளதாக சொல்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே ஹாலிடே படம் செமத்தியாய் வசூல் செய்து வருகிறதாம். ஹாலிடே படம் பாகிஸ்தானிலும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அங்கே முதல் வாரம் மட்டும் 1.76 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இந்தத் தொகை பாகிஸ்தானைப் பொருத்தவரை பெரிய வசூல் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி