செய்திகள்,திரையுலகம் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…

கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…

கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார்.கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை வழக்கம்போல் அனிருத்.

இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது:-என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் உணர்வுபூர்வமான குடும்ப கதை. இந்தக் கதையை சாதரணமாகத்தான் தனுஷிடம் சொன்னேன். நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தனுஷ் எனது நல்ல நண்பர் என்பதற்காக தயாரிக்கவில்லை, கதை பிடித்திருந்ததால்தான் தயாரிக்கிறார்.

இப்போதைக்கு அனிருத் மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறான். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள். விஜய்சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. நான் இன்னும் இது தொடர்பாக அவரைச் சந்திக்கவில்லை. எனவே எதையும் உறுதியாக கூறமுடியாது என்கிறார் கிருத்திகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி