அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…

இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…

இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மலிவு விலையில் அம்மா உப்பு வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

மூன்று வகையான உப்புகளை தலைமைச் செயலகத்தில்இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் அறிமுகம் செய்து வைத்து அவற்றின் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார். இரும்பு மற்றும் அயோடின் சத்து நிறைந்த உப்பு (ஒரு கிலோ ரூ.14), சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு (ரூ.10), குறைந்த அளவு சோடியம் கலந்த உப்பு (ரூ.21) ஆகியவை விற்பனைக்கு வரவுள்ளன.

மலிவு விலை உப்பு பாக்கெட்டுகளை தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பு தொழிற்சாலையில் இந்த மலிவு விலை உப்பு தயாராகிறது. முதல் கட்டமாக 100 டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்த உப்பு பாக்கெட்டுகள் அமுதம், சிந்தாமணி, கூட்டுறவு அங்காடிகள், கூட்டுறவுத் துறை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி