செய்திகள்,திரையுலகம் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சத்யா?…

அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சத்யா?…

அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சத்யா?… post thumbnail image
சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார்.அந்த படத்தில் அஜீத் கேரக்டர் பெயர்தான் படத்தின் டைட்டீல் என்றொரு ஆறுதலான செய்தி இலைமறை காய்மறையாக வெளியாகியுள்ளது.

அந்த வகையில், அஜீத் நடிக்கும் கேரக்டரின பெயர் பற்றி விசாரித்தபோது, சத்யாதேவ். ஆனால், அவரை சத்யா என்றுதான் அழைப்பார்கள் என்று அப்படக்குழுவிடமிருந்து தகவல் வருகிறது. ஆக, அஜீத்தின் 55வது பட டைட்டீல் சத்யா என்பதாகவே இருக்கலாம்.

ஆனாலும், கெளதம்மேனன் முறைப்படி அறிவிக்கிறபோதுதான் இது நூறு சதவிகிதம் உறுதியாகும். மேலும், சத்யா என்பது சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி