செய்திகள்,திரையுலகம் காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…

காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…

காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!… post thumbnail image
சென்னை:-கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பியின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது. இதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர் உள்ளடக்கிய 120 பேர் தாய்லாந்து சென்றனர்.

இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கருதியவர்கள் தாய்லாந்து நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருக்கும் ஒரு அருவியில் படம்பிடிக்க முடிவு செய்தனர்.தினமும் சுமார் 3 மணிநேரம் காட்டுக்குள் பயணம் செய்து அருவியை அடைவார்கள் அங்கு காலை 11 மணி முதல் 3 மணி வரைதான் சூரிய ஒளி இருக்கும் மற்ற நேரங்களில் உயரமான மலைகளின் நிழல்கள் சூழ்ந்துவிடும். தினமும் இப்படி நான்கு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினார்கள்.

விஷத் தன்மையுள்ள பாம்புகள், அசந்தால் குத்தி கிழித்து விடும், ஸ்படிக கற்கள், நீல நிறத்தில் இருக்கும் நீர், இவற்றை தாண்டித்தான் படப்பிடிப்பு நடத்தினோம். இணைய தளம் மூலம் இந்த இடத்தை பற்றி தெரிந்து கொண்டு இங்கு பாடல் காட்சியை எடுக்க முடிவு செய்தேன். தினமும் பிரச்சினை இல்லாமல்தான் சென்றது. ஒரு நாள் திடீரென்று அருவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்று தொலைவில்தான் நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம்.எங்களுடன் வந்த அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளம் பற்றி எச்சரித்தும் மேலே வந்து விட்டோம். சில நிமிட நேரத்திலேயே படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த அதிகாரி மட்டும் எச்சரிக்காமல் இருந்தால் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. கஷ்டப்பட்டு எடுத்த இந்த பாடல் காட்சியை மக்கள் இஷ்டப்பட்டு பார்ப்பார்கள் என்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி