செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!… post thumbnail image
மும்பை:-கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். பின்னர் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான தங்கள் விசாரணைக்கு உதவ பல்வேறு வீரர்களின் பெயர்களை பரிசீலனை செய்தனர். இறுதியில் தங்களுடைய விசாரணைக்கு உதவ முன்னாள் கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலியை நியமித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.முத்கல் கமிட்டியின் முடிவை கங்குலி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முத்கல் குழு தனது விசாரணை அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இக்குழுவில் முத்கல்லை தவிர இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான நாகேஸ்வர ராவ் மற்றும் மூத்த வழக்கறிஞரான நிலோய் தத்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தவிர இக்குழுவிற்கு உதவி செய்ய மூத்த போலீஸ் அதிகாரியான பி.பி. மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி