செய்திகள்,திரையுலகம் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…

ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…

ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!… post thumbnail image
மும்பை:-1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தையும், சுஷ்மிதா சென் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தையும் வென்றார்கள். ஐஸ்வர்யா ராய் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படம் மூலமும், சுஷ்மிதா சென் 1996ம் ஆண்டு வெளிவந்த ‘தஸ்தக்’ என்ற இந்திப் படம் மூலமும் நாயகிகளாக அறிமுகமானார்கள்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அது பற்றி சமீபத்தில் பேசிய சுஷ்மிதா சென், நானும் ஐஸ்வர்யா ராயும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும்படியான வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன் எதுவும் சொல்ல முடியாது. அந்த நாளை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், என்றார்.

சுஷ்மிதா தற்போது அவரது தாய் மொழியான பெங்காலியிலும் ‘நிர்பாக்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது, நல்லதொரு பெங்காலித் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தேன். ‘நிர்பாக்’ படத்தின் கதையைக் கேட்டதுமே, இது எனக்குப் பொருத்தமான படம் என நடிக்க சம்மதித்தேன், என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி