செய்திகள்,திரையுலகம் 15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…

15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…

15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!… post thumbnail image
சென்னை:-டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் காதல் மன்னன். இந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெஸ் நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில்தான் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் மானு. சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான இவர் அந்த படத்தின் வெற்றியினால் கோலிவுட்டில் பெரிய நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் தேடிவந்த பட வாய்ப்புகளைகூட தவிர்த்துவிட்டு சிங்கப்பூர் சென்ற மானு, அங்குள்ள தொலைக்காட்சிகளில் முகம் காட்டி வந்தார். அந்த வகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தற்போது டைரக்டர் ஜெயம் ராஜா நடித்துள்ள என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்துள்ளார் மானு.

இந்த படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்திருந்த மானு, 15 வருடங்கள் ஆனபோதும் அதே பழைய இளைமையான மானுவாகவே காட்சி கொடுத்தார். மேலும், இந்த படத்தில் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதனால் இது மாதிரி என் மனதை தொடும் வேடங்கள் கிடைத்தால் அவ்வப்போது சினிமாவில் நடிப்பேன் என்றார் மானு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி