செய்திகள்,திரையுலகம் ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் அனிமேஷன் படம் மூலம் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தை முதன்முறையாக இந்தியாவுக்கு எடுத்து வந்தார் ரஜினி. அதையடுத்து இப்போது தான் நடித்து வரும் லிங்கா படத்திலும் பிரமாண்டங்களை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வரும் ரஜினி, அப்படத்தின் 1940களில நடக்கும் கதைக்களத்துக்காக சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளை இறக்குமதி செய்து வருகிறார்.

அதேவேளையில், பாண்டம் ப்ளக்ஸ் 4 கே ஸ்பீடு என்ற அதிநவீன கேமரா மூலம் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கி வருகின்றனர். குறிப்பாக ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லீ விட்டேகரின் சண்டை பயிற்சியில் ரஜினி நடிக்கும் காட்சிகளை இந்த அதிநவீன கேமராவை ஸ்டீரியோ விஷன் மூலம் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படமாக்கி வருகிறார். இந்த கேமரா இந்தியாவில் இதுவரை தயாரான எந்த படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி