செய்திகள்,திரையுலகம் பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…

பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…

பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
மதுரையை ஒட்டிய கிராமத்தில் நாயகி சரோஜா, தனது தாய் மற்றும் முறைமாமனுடன் வாழ்ந்து வருகிறாள். அவளை முறைமாமனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என சரோஜாவின் தாய் ஆசைப்படுகிறாள்.

ஆனால், சரோஜாவோ ஜீன்ஸ் பேண்ட் போட்ட, சுருட்டை முடியுடன் உள்ள ஸ்டைலான ஒருவன்தான் தனக்கு கணவனாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆகையால், கிராமத்துவாசியான தனது முறைமாமனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
இந்நிலையில், நகரத்திலிருந்து தனது பாட்டியின் ஊரான சரோஜாவின் ஊருக்கு நாயகன் ஜயின் வருகிறான். வந்தவுடன் எதிர்பாராத ஒரு விபத்தில் நாயகனும், நாயகியும் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கிவிடுகிறார்கள். இவர்கள் காதல் படிப்படியாக வளர்கிறது.

ஒருநாள் வாழைத் தோப்பில் வைத்து இருவரும் உல்லாசமாக இருக்கிறார்கள். அதன்பிறகு, நாயகன் இவளை விட்டுவிட்டு நகரத்திற்கு புறப்பட்டு சென்றுவிடுகிறான். நாயகனை பிரிந்து வாடும் நாயகி அவன் நினைவாலேயே உருகி வருகிறாள்.ஒருகட்டத்தில், இவளது வயிற்றில் கரு உருவாகிறது. அதை அறிந்ததும் அவளது தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். காதலனையும் இழந்து, தாயையும் இழந்து பரிதவிக்கும் நாயகிக்கு அவளது முறைமாமன் ஆறுதலாக இருக்கிறாள். இதற்கிடையில், அதே ஊரில் வசிக்கும் மைனர் இவளை அடையவேண்டுமென்று துடியாய் துடிக்கிறான்.
இறுதியில், நாயகன் திரும்பி வந்து நாயகியை கரம்பிடித்தாரா? அல்லது ஆறுதலாக இருந்த முறைமாமனையே சரோஜா திருமணம் செய்து கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

சரோஜாவாக நாயகி ஸ்ரீதேவி, படம் முழுக்க இவரே நிரம்பியிருக்கிறார். நாயகனுடன் ரொமான்ஸ் பண்ணுவதாகட்டும், அவனோடு கட்டிப்புரண்டு கலவியில் ஈடுபடுவதாகட்டும் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மை சூடேற்றுகிறது. தனது முன்னழகை அறைகுறையாக காட்டி ரசிகர்களை கவிழ்த்துப் போடுகிறார்.நாயகனுக்கு நடிப்பு சுத்தமாக வரவேயில்லை. படத்தில் இவரை ஒரு ஆணழகன்போல் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அதற்குண்டான ஒரு தகுதியும் இவருக்கு இல்லை. படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிற்கே கதாபாத்திரங்கள் வருகின்றன. ஆனால், நாயகியைத் தவிர அனைவருக்கும் சுத்தமாக நடிப்பு என்பதே சுத்தமாக வரவில்லை.

அதரபழசான கதையையே இயக்குனர் மீண்டும் தூசு தட்டி எடுத்திருக்கிறார். படத்தின் காட்சியமைப்புகளும் சரி, கதாபாத்திரங்களின் தேர்வும் சரி எதையும் சரிவர முடிவெடுக்க முடியாமல் திணறியிருக்கிறார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் எரிச்சலைத்தான் வரவழைக்கின்றன.படத்தில் இசை நிறைய இடங்களில் நிசப்தமாகவும், சில இடங்களில் இரைச்சலாகவும் வருகிறது. படத்தின் தொய்வுக்கு இதுவும் ஒரு காரணம். ஒளிப்பதிவும் மெச்சும்படியாக இல்லை.

மொத்தத்தில் ‘பூக்கடை சரோஜா’ மோசமானவள்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி