செய்திகள்,திரையுலகம் தனுஷ் தயாரிப்பில் நடிக்கவில்லை என விஜய்சேதுபதி அறிவிப்பு!…

தனுஷ் தயாரிப்பில் நடிக்கவில்லை என விஜய்சேதுபதி அறிவிப்பு!…

தனுஷ் தயாரிப்பில்  நடிக்கவில்லை என விஜய்சேதுபதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர்.சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதுசம்பந்தமாக திரிஷாவை அணுகியபோது அவர் மறுத்து விட்டதாக செய்தி பரவியுள்ளது.

இதேபோல், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது டாணாவில் நடிப்பது போன்று அடுத்து அவர் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. இப்போது அதுபற்றி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதிதி.

அதில், எனக்கு பிடித்த நடிகர்களில் தனுசும் ஒருவர். அவரது தயாரிப்பில் நடிக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஏற்பேன். ஆனால். அதுசம்பந்தமாக என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அதனால் தனுஷ் தயாரிப்பில் நான் நடிப்பதாக வெளியான செய்தி தவறானது என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி