செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…

கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…

கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!… post thumbnail image

கராச்சி:-பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். தீவிரவாதிகள்

அந்நாட்டு காவல்துறையின் உடையினை அணிந்துகொண்டு விமானநிலையத்திற்குள் சென்றனர். விமானநிலையத்தில் அவர்கள் அங்கியிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விமானநிலையத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக 6 மணி நேரம் போராடி நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலியாகினர். விமானநிலையத்தில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு பாதுகாப்புபடை அதிகாரி ரிஸ்வான் அக்தர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக அடையாளம் கண்டு கொள்வதற்காக பிணங்கள் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கராச்சியில் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலமையகமாக கொண்டு செயல்படும் தெரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தடை விதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் தலிபான் பிரிவிலே அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களும், அதனை எதிர்ப்பவர்களும் இரண்டாக பிரிந்தது. தலிபான் இயக்கம் இரண்டாக உடைந்த பின்னர் நாட்டியில் இரண்டு பிரிவினருக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்தது. தினமும் தீவிரவாதிகள் மோதிக்கொண்டு இறந்தனர்.அரசும் தங்களது நடவடிக்கையை தொடர்ந்து எடுத்துவந்தது. சமீபத்தில் தீவிரவாதிகள் ராணுத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவந்தனர். இந்நிலையில் விமானம் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தீவிரவாதிகள் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி