செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட படம் இதுவரை 80 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தென்னிந்தியாவில் இன்னும் 350 தியேட்டர்களில் ஒடிக் கொண்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படம் திரையிடப்பட இருக்கிறது. இது தவிர ஜப்பான் நாட்டில் விரைவில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்பட இருக்கிறது. தற்போதைய பல்வேறு உலகப் பட விழா அமைப்புகளிடமிருந்து படத்தின் இயக்குனர் சவுந்தர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி