விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!…

விளம்பரங்கள்

சென்னை:-கத்தி படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.இந்த படத்தில் விஜய்யுடன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது.இதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது உண்மை. இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும் என்கிறார் போனி கபூர்.
ஸ்ரீதேவி கடைசியாக தமிழில் நான் அடிமை இல்லை படத்தில் நடித்தார். 1986ல் இப்படம் வந்தது. தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்து வந்த ஸ்ரீதேவி தற்போது விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் அவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். அருந்ததி, மகதீரா தெலுங்கு படங்களை போல் சரித்திர காலத்தையும் இந்த காலத்தையும் கலந்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளதாம்.
இதில் ஸ்ரீதேவி அரசி வேடத்தில் அதாவது விஜய்க்கு ஜோடியாக வருகிறாராம். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த படம் விஜய்க்கு 58 வது படம் ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: