செய்திகள்,திரையுலகம் சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…

சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…

சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!… post thumbnail image
சென்னை:-பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு மலையாளத்தில் 25 படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரிரு படங்களை மட்டும் ஏற்றுள்ளார்.

தெலுங்கில் நானி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாகார்ஜுனாவுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க அழைத்துள்ளார். இதை அவர் ஏற்பார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி