டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.டுவிட்டரில் இணைந்து 9மணி நேரங்களுக்குள் , 2,68,000 பாலோயர்களை பெற்றுள்ளது

மேலும் தனது முதல் டிவிட்டாக இது எங்கள் முதல் டிவிட் என்று நாங்கள் உறுதி படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்வோம் என்று தெரிவித்துள்ளது.இந்த பதிவை 1,70,000 பேர் ரீடுவீட் செய்துள்ளதோடு மட்டுமல்லாது, கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை பிடித்த டிவிட்டாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதேபோல், பேஸ்புக்கிலும், இதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு உள்ளது.அதன் பேஸ்புக் பக்கத்தை முதல் நாளில் 7,300 பேர் லைக் செய்துள்ளனர்.சிஐஏவின் டிவிட்டரில் இணைந்து இருப்பது குறித்து செய்திய வெளியிட்டுள்ள பிபிசி, சிஐஏ சிறந்த ஒரு ”ஜோக் டிவிட்” மூலம் தனது கணக்கை துவங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: