செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்!…

கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்!…

கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்!… post thumbnail image
சூரிச்:-உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, ‘நம்பர் ஒன்’ அந்தஸ்துடன் பிரேசிலுக்கு பயணமாகிறது.

1,300 புள்ளிகளுடன் ஜெர்மனி 2வது இடத்தில் நீடிக்கிறது. 20வது உலக கோப்பையை நடத்தும் பிரேசில் அணி ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்தை பிடித்துள்ளது. போர்ச்சுல் அணி 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

5வது இடத்தில் அர்ஜென்டினாவும், 6வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 7வது இடத்தில் உருகுவேயும், 8வது இடத்தில் கொலம்பியாவும், 9வது இடத்தில் இத்தாலியும், 10வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி