பாகிஸ்தானில் வெளியாகும் முதல் இந்திய ராணுவப் படம்!…

விளம்பரங்கள்

மும்பை:-ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கிய துப்பாக்கியை இந்தியில் ‘ஹாலிடே’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்தியாவில் வெளியாகும் இன்றைய தினமே பாகிஸ்தானிலும் வெளியாகிறது.

இந்திப் படங்களை பாகிஸ்தான் மக்கள் விரும்பிப் பார்த்தாலும் இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்தும் படங்களை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை. காரணம் பாகிஸ்தான் சென்சார் போர்ட் அனுமதிக்காது. ஹாலிடே படமும் இந்திய ராணுவத்தை சேர்ந்த தளபதிகள் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் சிலீப்பர் செல்லை அழிப்பது மாதிரியான கதை. அதிலும் வில்லன் முஸ்லிம் தீவிரவாதி. இதனால் படம் பாகிஸ்தானில் வெளிவருவது சந்தேகம் என்றே கூறப்பட்டது.

அக்ஷய் குமாருக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்தாலும் வராது என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் சென்சார் போர்ட்டு தீவிரவாதி முஸ்லிம் தீவிரவாதி என்கிற பகுதியில் மட்டும் சில கட்டுகளை கொடுத்து வெளியிட அனுமதித்து விட்டது. அந்த வகையில் பாகிஸ்தானில் வெளியாகும் முதல் இந்திய ராணுவ படம் பெருமையை ஹாலிடே பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: