செப்டம்பர் மாதம் ஒபாமாவுடன் மோடி சந்திப்பு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-இந்தியாவின் 15வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒபாமாவுடனான மோடியின் இந்த சந்திப்பானது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா உறவுக்கு இடையில் ஏற்பட்ட சிறு மனக் கசப்புக்கு மருந்து போடும் வகையில் அமையும் என்று இந்திய வெளியுறவு துறை வட்டாரங்கள் நம்புகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: